Press "Enter" to skip to content

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மீண்டும் அனுமதி அளித்தது அமெரிக்கா

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதால் அந்த தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

வாஷிங்டன்:

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.

அதே சமயம் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

இதற்கிடையே, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள்  வெளியானது. இதனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை அந்த தடையை நீக்க பரிந்துரை செய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »