Press "Enter" to skip to content

சுப்ரீம் நீதிமன்றத்திற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தனது முதல் பணி நாளில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

புதுடெல்லி:

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தனது முதல் பணி நாளில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் பார் கவுன்சில் ஆப் இந்தியா, சுப்ரீம் நீதிமன்றம் வக்கீல்கள் சங்கம், வழக்குத் தாக்கல் செய்யும் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சுப்ரீம் நீதிமன்றம் வக்கீல்கள் சங்கத் தலைவரும், மூத்த வக்கீலுமான விகாஸ் சிங் கூறுகையில், சுப்ரீம் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையை மே 14-ந் தேதிக்குப் பதிலாக ஒரு வாரத்துக்கு முன்னதாக மே 8-ந் தேதி தொடங்கவும், ஜூன் 26-ந் தேதி வரை விடுமுறை அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சுப்ரீம் நீதிமன்றம் இணைப்புக் கட்டிடத்தில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என்றார்.

இதே தகவலை, வழக்கு தாக்கல் செய்யும் வக்கீல்கள் சங்க செயலாளர் அரிஸ்டாட்டில் ஜோசப்பும் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் நீதிமன்றம் நாட்காட்டியின்படி, மே 14 தொடங்கி ஜூன் 30 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »