Press "Enter" to skip to content

முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் – நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதன் பிறகு மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்குகிறார்.

அப்போது எந்த தேதியில் பதவி ஏற்பது என்ற விவரம் வெளியிடப்படும். அனேகமாக வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »