Press "Enter" to skip to content

கொரோனா பரவல் எதிரொலி – தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

அதிகரித்து வரும் கொரோனா பரவலால் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சென்னை:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மே 6-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்கள் அனுமதி.

மருந்தகங்கள், பால் விநியோகம் வழக்கம்போல் செயல்படும்.

பத்திரிக்கைத் துறை மற்றும் கல்லெண்ணெய் பங்க்குகள் செயல்பட அனுமதி

மளிகை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி.

டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.

உணவகம், டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

திரையரங்குகள் செயல்பட தடை.

அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை டாக்சிகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகளில் இயங்க தடை நீடிப்பு.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 25 பேர் பங்கேற்கலாம்.

இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலத்தில் பங்குபெற அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக குறைப்பு.

சமுதாயம், அரசியல், கல்வி, கலாசாரம் சார்ந்த விழாக்கள் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை

ஊரகப் பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட தடை.

இரவு நேர ஊரடங்கு மற்றும்  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை நீடிக்கும்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மே 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »