Press "Enter" to skip to content

மாநிலங்களின் கையிருப்பில் 2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி – விரைவில் 3 லட்சம் தடுப்பூசி விநியோகம்

மாநிலங்களின் கையிருப்பில் தற்போது 2 கோடியே 4 லட்சத்து 96 ஆயிரத்து 625 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி:

மாநிலங்களின் கையிருப்பில் 2 கோடிக்கு மேற்பட்ட டோஸ் கொரோனா தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலங்களின் கையிருப்பில் தற்போது 2 கோடியே 4 லட்சத்து 96 ஆயிரத்து 625 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. மேலும், சுமார் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 3 நாட்களில் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இத்துடன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 20 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்து 230 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக கொடு்த்துள்ளது.

இவற்றில் இதுவரை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், சுகாதார பணியாளர்கள் 96 லட்சத்து 45 ஆயிரத்து 695 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 66 லட்சத்து 43 ஆயிரத்து 661 பேர் 2-வது தவணையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

முன்கள பணியாளர்களில் 1 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 96 பேர் முதல் டோசும், 81 லட்சத்து 96 ஆயிரத்து 53 பேர் 2-வது டோசும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

60 வயதை தாண்டியவர்களில் 5 கோடியே 45 லட்சத்து 15 ஆயிரத்து 352 பேர் முதல் டோசும், 1 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரம் பேர் 2-வது டோசும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 கோடியே 72 லட்சத்து 78 ஆயிரத்து 554 பேர் முதல் டோசும், 91 லட்சத்து 7 ஆயிரத்து 311 பேர் 2-வது டோசும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 52 லட்சத்து 64 ஆயிரத்து 73 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »