Press "Enter" to skip to content

வங்கி வேலை நேரம் 13-ந் தேதி வரை குறைப்பு: வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும்.

சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

அதன்படி வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.

ரொக்கப் பரிவர்த்தனை, கணினிமய பரிவர்த்தனைகளுக்கு என்.இ.எப்.டி. எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை வழங்க வேண்டும். அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த தகவல்கள், தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »