Press "Enter" to skip to content

சென்னையில் மின்சார தொடர் வண்டிகளின் சேவை அதிகரிப்பு- தெற்குதொடர்வண்டித் துறை

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 தொடர் வண்டிகளும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 தொடர் வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

சென்னை:

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக சென்னையில் மிக குறைந்த அளவிலேயே மின்சார தொடர் வண்டிகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னையில் மின்சார தொடர் வண்டிகளின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்குதொடர்வண்டித் துறையின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை புறநகர் மின்சார ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும்தொடர்வண்டித் துறை, சுகாதாரம், நீதி மன்றம், தூய்மை பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவன ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார தொடர் வண்டிகளில் பயணித்து வருகின்றனர்.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் மின்சார தொடர் வண்டிகளின் சேவை அதிகரிக்கப்பட்டு 279 மின்சார தொடர் வண்டிகள் இயக்கப்படும். சென்னை-திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 48 தொடர் வண்டிகளும், திருவள்ளூர், அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் 49 தொடர் வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

சென்னை-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 தொடர் வண்டிகளும், கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை-சென்னை 24 தொடர் வண்டிகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 12 தொடர் வண்டிகளும், வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே 17 தொடர் வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 தொடர் வண்டிகளும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 தொடர் வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

ஆவடி-பட்டாபிராம் பட்டாளம் சைடிங் இ டெப்போ இடையே 2 தொடர் வண்டிகளும், பட்டாபிராம் பட்டாளம் சைடிங் இ டெப்போ-ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் பட்டாளம் சைடிங் இ டெப்போ இடையே 4 தொடர் வண்டிகளும் இயக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் ஞாயிறு கால அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி கடந்த 31-ந்தேதி முதல் நேற்று வரை 208 மின்சார தொடர் வண்டிகள் இயக்கப்பட்டு வந்தன. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் 279 தொடர் வண்டிகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »