Press "Enter" to skip to content

ஜூன் 3-வது வாரத்தில் இருந்து 11-ம் வகுப்புக்கான வகுப்புகளை தொடங்கலாம்- தமிழக அரசு

10-ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு ஆகிய இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதாமல் மாணவ- மாணவிகள் 11-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

ஜூன் 3-வது வாரத்தில் இருந்து 11-ம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம். மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே பிரிவிற்கு அதிகமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக தேர்வு செய்யலாம். அதற்கும் மேல் விண்ணப்பிக்கபட்டால், அவர்கள் தேர்வு செய்து பாடப்பிரவு தொடர்பான கீழ்வகுப்பின் பாடத்தில் இருந்து கொள்குறி வகையில் வினா கேட்கப்படும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »