Press "Enter" to skip to content

கோவின் இணைய தளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு – மத்திய அரசு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவின் இணைய தளத்தில் 11 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)  செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களின் வசதிக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கோவின் என்ற இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளோர் இந்த இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், தடுப்பூசி மையங்களுக்கே நேரடியாகச் சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

இதற்கிடையே, தடுப்பூசி முன்பதிவிற்காக பயன்படுத்தப்படும் இந்த இணையதளத்தில் தமிழ் மொழி தவிர 11  மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, கோவின் இணைய தளத்தில் படிப்படியாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநில மொழிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஆதலால் அடுத்த இரு தினங்களில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவின் இணையதள பக்கத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »