Press "Enter" to skip to content

தமிழகம் உள்பட17 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.9,871 கோடி நிதி

நடப்பு நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடியை பகிர்ந்து அளிக்க நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி:

நடப்பு 2021-22-ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை நிதியில் 3-வது தவணையாக ரூ.9 ஆயிரத்து 871 கோடி வழங்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு இத்தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இத்தொகையுடன், இந்த நிதியாண்டில் முதல் 3 மாதங்களில் மொத்தமாக ரூ.29 ஆயிரத்து 613 கோடி, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவின்படி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியை தமிழகம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வழங்கவும் 15-வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடியை பகிர்ந்து அளிக்க நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. அது 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »