Press "Enter" to skip to content

இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து – உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்துவதற்கு உத்தர பிரதேச அரசு அனுமதி வழங்கியது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ளும் சிவபக்தர்கள் ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுவர்.

இந்த யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்துச் செல்வார்கள். 

அவ்வாறு எடுக்கப்பட்ட கங்கை நீரை தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் நடத்துவார்கள். இந்த யாத்திரைக்குப் பெயர் கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. 

இதையடுத்து உத்தரகாண்ட் மாநில அரசு இது குறித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு கன்வர் யாத்திரையை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

கொரோனா 3-வது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதால் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியுடன் பார வண்டிகளில் கங்கை நீரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »