Press "Enter" to skip to content

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு

இந்தோனேசியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் அந்த நாடு தினசரி கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இந்தியாவை முந்தியுள்ளது.

ஜகார்த்தா:

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அந்த வகையில் இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 517 பேருக்கு புதிதாக  கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)  தொற்று உறுதி
செய்யப்பட்டது.

இதன் மூலம் அங்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 991 பேர்
கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 69 ஆயிரத்தை தாண்டியது.

தினசரி கொரோனா பாதிப்பில் இந்தோனேசியா இந்தியாவை முந்தி உள்ளது. இந்தியாவில் நேற்று 39 ஆயிரத்துக்கும் குறைவாகவே நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு உறுதி
செய்யப்பட்டது.

இதன் மூலம் இந்தோனேசியா ஆசியாவின் கொரோனா பரவலாக பரவல் மையமாக (ஹாட்ஸ்பாட்) மாறியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இந்தோனேசியா
அடுத்த இந்தியாவாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதாவது, இந்தோனேசியாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் இதே நிலையில் நீடித்தால், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 2-வது அலையால் இந்தியா சந்தித்த பேரழிவை இந்தோனேசியாவும்
சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு மாதத்துக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அது தற்போது கிட்டத்தட்ட 7
மடங்கு உயர்ந்துள்ளது.

அந்த நாட்டின் இரு மிகப்பெரும் தீவுகளான ஜாவா மற்றும் பாலி தீவுகளில் டெல்டா மாறுபாடு   கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)   வேகமாக பரவி வருவதே இந்த மோசமான
சூழ்நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோல்   கொரோனா தடுப்பூசி   செலுத்துவதிலும் அந்த நாடு பின்தங்கியுள்ளது. போதுமான தடுப்பூசிகளை பெற அந்த நாட்டு அரசு போராடி வருகிறது.

மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் 4-வது மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தோனேசியாவில் மொத்த மக்கள் தொகையான 27 கோடி பேரில் வெறும் 1½
கோடி பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »