Press "Enter" to skip to content

சீன ஆய்வு கூடத்தில் விபரீதம்: குரங்கில் இருந்து பரவிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கி ஊழியர் பலி

சீனாவில் பரவிய கொரோனா நோயால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் குரங்கிடம் இருந்து பரவிய வைரசால் ஒருவர் பலியாகி இருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பீஜிங்:

சீனாவில் பரவிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுக்கூட ஊழியர் பலியாகி இருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 2 குரங்குகள் திடீரென இறந்துவிட்டன. அவற்றை விலங்கு ஆய்வுக்கூடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அதில் 53 வயது ஊழியர் ஒருவரும் பங்கேற்றார்.

சில நாட்கள் கழித்து அவருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. அவரை சோதித்த போது அவரது உடலில் ‘பீ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)’ எனும் குரங்குகளை தாக்கும் ஒருவகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி இருந்தது தெரிய வந்தது.

பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல்நிலை தேறவில்லை. இதையடுத்து கடந்த மே மாதம் 27-ந் தேதி அவர் உயிரிழந்தார். இந்த தகவல் இப்போதுதான் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே சீனாவில் பரவிய கொரோனா நோயால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் குரங்கிடம் இருந்து பரவிய வைரசால் ஒருவர் பலியாகி இருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்…பேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது – அதிபர் ஜோ பைடன்

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »