Press "Enter" to skip to content

குஜராத்தில் 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

குஜராத்தில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் 370 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus, Schools Open, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்),  பள்ளிகள் திறப்பு 

அகமதாபாத்:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் கணினிமய மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »