Press "Enter" to skip to content

இன்று முதல் தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவு

15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் பலரும் நூலகங்களை திறக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

* போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களை திறக்கலாம்.

* 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »