Press "Enter" to skip to content

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – இடஒதுக்கீட்டு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

சென்னை:

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில்  காஞ்சிபுரம், உத்தரமேரூர் – பொதுப்பிரிவு பெண்கள், குன்றத்தூர், ஸ்ரீபெரும்பத்தூர் – பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

காட்டங்களத்தூர், பரங்கிமலை பட்டியலின பெண்கள் – திருக்கழுக்குன்றம் பட்டியலின பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் லத்தூர், மதுராந்தகம் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் அச்சரப்பாக்கம், சித்தாமூர், திருப்போரூர் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் 8 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மயிலம், மேல்மலையனூர், வானூர், விக்கிரவாண்டி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செஞ்சி, கண்டமங்கலம், மரக்காணம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் 6 இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சங்கராபுரம் – பட்டியலின பெண், தியாகதுருகம், திருநாவலூர் – பட்டியலின பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆற்காடு – பட்டியலின பொதுப்பிரிவு 2 இடங்கள் பொதுப்பிரிவு பெண்கள், 3 இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி 7 இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆற்காடு – பட்டியலின பெண், சோளிங்கர் – பட்டியலின பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 இடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கும், 3 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »