Press "Enter" to skip to content

விநாயகர் சதுர்த்தி- புதுச்சேரியில் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

போக்குவரத்து நெரிசல், சாலை சந்திப்புகளில் விநாயகர் சிலைளை வைக்கக்கூடாது. விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும்

சிலை வைக்கப்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடக்கூடாது. விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்துச் செல்லலாம். ஆனால், ஊர்வலமாக செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »