Press "Enter" to skip to content

ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடருகிறதே?- கமல் அறிக்கை

சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்பட போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவது அம்பலம் ஆகியுள்ளது. இந்த மணல் கட்டுமானத்துக்கு உகந்தது அல்ல. இந்த மணலை கொண்டு கட்டிடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில் இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றை பயன்படுத்தப்போவது யார்? அதில் வாழப்போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?

இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருடுகிறார்களே என வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடருகிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்பட போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா?.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »