Press "Enter" to skip to content

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்- 20 லட்சம் என்ற இலக்கை கடந்து சாதனை

இன்று மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட அளவான 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், தொடர் வண்டி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன. இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது. இதனால் தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டினர்.

இன்று ஒரே நாளில் 20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர முயற்சியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கு விரைவாகவே எட்டப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.30 மணியளவில் 20 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதற்காக முகாம்களுக்கு மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »