Press "Enter" to skip to content

கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அறிவித்த புது சாதனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் மற்றும் ஐபேட் சின்ன (மினி) மாடல்களில் துவங்கி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7, ஐபோன் 13, 13 சின்ன (மினி), ஐபோன் 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

 
ஐபேட் மற்றும் ஐபேட் சின்ன (மினி)

புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி ஒளிக்கருவி (கேமரா) வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபேட் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய ஐபேட் சின்ன (மினி) 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி ஒளிக்கருவி (கேமரா) கொண்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் முந்தைய மாடலை விட 40 சதவீதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

ஆப்பிள் வாட்ச் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

புதிய ஆப்பிள் வாட்ச் 7 நாள் முழுக்க மின்கலவடுக்கு (பேட்டரி) பேக்கப், பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இ.சி.ஜி. போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய வாட்ச் 7 இதுவரை வெளியான வாட்ச் மாடல்களில் மிகவும் உறுதியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக வாட்ச் பேஸ்கள், ஐந்து அலுமினியம் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 விலை 399 டாலர்கள் என துவங்குகிறது.

ஐபோன் 13

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 சின்ன (மினி)

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 சின்ன (மினி) மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது. புதிய பிராசஸருடன் ஐபோன் 13 மாடலில் 12 எம்பி வைடு ஒளிக்கருவி (கேமரா) சென்சார் உள்ளது.

2021 ஐபோன் மாடலில் முன்பை விட அதிக 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள மின்கலவடுக்கு (பேட்டரி) முந்தைய மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 13 சின்ன (மினி) மின்கலவடுக்கு (பேட்டரி) முந்தைய ஐபோன் 12 சின்ன (மினி) மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.

புதிய ஐபோன் சீரிசில் மேம்பட்ட மேக்சேப் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 சின்ன (மினி) 128 ஜிபி விலை ரூ. 69,900 என்றும் ஐபோன் 13 விலை ரூ. 79,900 என துவங்குகிறது.

ஐபோன் 13 ப்ரோ

ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ்

புதிய ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் இதுவரை இல்லாத அளவு அசத்தலான ஒளிக்கருவி (கேமரா) அப்டேட்களை பெற்று இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் டெலிபோட்டோ ஒளிக்கருவி (கேமரா), அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஒளிக்கருவி (கேமரா) வழங்கப்பட்டு இருக்கிறது.

இவற்றில் உள்ள அனைத்து ஒளிக்கருவி (கேமரா)க்களிலும் நைட் மோட் அம்சம் உள்ளது. இத்துடன் பிரத்யேக மேக்ரோ மோட் வழங்கப்பட்டு உள்ளது. ஐபோன் 13 ப்ரோ மாடலில் புகைப்படங்களை அதிகளவு கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐபோன் 13 ப்ரோ மாடல் 6.1 இன்ச் அளவிலும் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் அளவிலும் கிடைக்கிறது. இவற்றில் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ப்ரோ மோஷன், ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல் மற்றும் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

இந்தியாவில் ஐபோன் 13 ப்ரோ 128 ஜிபி விலை ரூ. 1,19,900 என துவங்குகிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி ரூ. 1,29,900 என துவங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »