Press "Enter" to skip to content

அமெரிக்காவில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்

வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர்.

புதுடெல்லி:

குவாட் மாநாடு, ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று வாஷிங்டன் சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் அமெரிக்காவின்  உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.

தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று ஆஸ்திரேலிய பிரதமர்  ஸ்காட் மோரிசன், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை மோடி சந்தித்து பேசுகிறார். 

மோடி உடனான சந்திப்பில் குவல்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், பிளாக்ஸ்டோன் நிறுவன தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »