Press "Enter" to skip to content

நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு- தமிழக அரசு உத்தரவு

5 சவரனுக்கு உட்பட்டு மட்டுமில்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில் ஏராளமான முறைகேடுகள் இருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

5 சவரனுக்கு உட்பட்டு மட்டுமில்லாமல் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட 100 சதவீதம் நகைக்கடன்களை ஆய்வு செய்யும்.

சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 21 -ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »