Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை – மீறினால் தண்டனை: தலிபான்கள் அறிவிப்பு

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கின. இதையடுத்து, கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது.

இதனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையே, தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.

புதிய ஆட்சி  அமைத்துள்ள தலிபான்கள் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை தலிபான்கள் விதித்துள்ளனர். முடிதிருத்தும் கலைஞர்களுக்கு  முகச் சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலிபான் அரசின் மத காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களுக்கு தலிபான்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தலைமுடி மற்றும் தாடியை வெட்டும்போது முடி திருத்தம் செய்யும் கலைஞர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் புகார் சொல்வதற்கான உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »