Press "Enter" to skip to content

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்புக்கான அனுமதி எப்போது கிடைக்கும்?

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

நியூயார்க்:

பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம்

விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »