ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாச, ஷிவம் டுபே 31 பந்தில் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் அபு தாபியில் இன்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் மட்டையாட்டம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் 42 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 60 பந்தில் சதம் விளாசினார். அவர் கடைசி 18 பந்தில் 51 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 15 பந்தில் 32 ஓட்டங்கள் எடுத்தும், ருதுராஜ் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டெவாட்டியா 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், லீவிஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லீவிஸ் 12 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருன் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் மட்டையிலக்குடுக்கு 5.2 சுற்றில் 77 ஓட்டங்கள் குவித்தது.
மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் அடித்ததுடன், 21 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து சஞ்சு சாம்சன் உடன் ஷிவம் டுபே ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட, ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் தனது முதல் ஐ.பி.எல். அரைசதத்தை பதிவு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 8.1 சுற்றில் 100 ஓட்டத்தில்யும், 12.4 சுற்றில் 150 ஓட்டத்தில்யும் கடந்தது.
அணியின் ஸ்கோர் 15.4 சுற்றில் 170 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் 24 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது மட்டையிலக்குடுக்கு ஷிவம் டுபே உடன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலக்கை வெற்றிகரமாக எட்டியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 17.3 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்து ஏழு மட்டையிலக்கு வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷிவம் டுபே 64 ரன்களுடனும், பிலிப்ஸ் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர் 2 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar