Press "Enter" to skip to content

மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த உதாரணம் நிதின் கட்கரி – சரத் பவார் பாராட்டு

நிதின் கட்கரி அமைச்சகத்தின் திட்டங்கள் எனில் தொடக்க விழா முடிந்த சில நாட்களில் பணிகள் தொடங்கிவிடும் என சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் மத்திய அரசின் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் நிதின் கட்காரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சரத்பவார் பேசியதாவது:

அகமத் நகரில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைக்க உள்ளதால் தான் இந்த விழாவில் பங்கேற்றேன். நான் பங்கேற்பதை அவரும் விரும்பினார். அடிக்கல் நாட்டிய பிறகு எந்தத் திட்டங்களும் தொடங்குவது அரிதாகத்தான் நடக்கும். ஆனால், நிதின் கட்கரி அமைச்சகத்தின் திட்டங்கள் எனில் விழா முடிந்த சில நாட்களில் பணிகள் தொடங்கிவிடும்.

நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதிகள் எப்படி பணியாற்றலாம் என்பதற்கு நிதின் கட்கரி சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். சாலை மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக கட்கரி பதவி ஏற்பதற்கு முன்னர் 5 ஆயிரம் கி.மீ., அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளது. ஆனால் அவர் பதவி ஏற்றதும் 12 ஆயிரம் கி.மீ., அளவுக்கு பணிகள் நடந்துள்ளது என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »