Press "Enter" to skip to content

ஊரக உள்ளாட்சி தேர்தல் – முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

சென்னை:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி என 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

9 மாவட்டங்களில் மொத்தம் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முதல் கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள்,மதுபானக்கடைளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »