Press "Enter" to skip to content

பெரும் அடைமழைக்கு வாய்ப்புள்ள 6 மாவட்டங்கள்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது அடைமழை (கனமழை)யும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை,  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழையும் பெய்யக்கூடும்.

06.10.2021: நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும் பெய்யக்கூடும்.

07.10.2021:  வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

08.10.2021:  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.10.2021: வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சத்தியமங்கலம்  (ஈரோடு) 8, சித்தார் (கன்னியாகுமாரி) 7, பேச்சிப்பாறை  (கன்னியாகுமாரி), எமெரால்ட்  (நீலகிரி) தலா 5, பரங்கிப்பேட்டை  (கடலூர்),  தீர்த்தாண்டதானாம் (ராமநாதபுரம்) தலா 4, அண்ணா  பல்கலை  (சென்னை), சத்தியபாமா  பல்கலை    (செங்கல்பட்டு), புழல் (திருவள்ளூர்), பொள்ளாச்சி  (கோவை), திருக்கோயிலூர்  (கள்ளக்குறிச்சி), திருபுவனம்  (சிவகங்கை), பெரியாறு (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 3, அயனாவரம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம்,   மேட்டுப்பட்டி  (மதுரை),  வீரகனூர்  (சேலம்),  ஆயிக்குடி  (தென்காசி), தலா   2, சென்னை விமான நிலையம், மயிலாடுதுறை, காரியாபட்டி (விருதுநகர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கடம்பூர் (தூத்துக்குடி), மீமிசல்  (புதுக்கோட்டை), காட்பாடி (வேலூர்), பாபநாசம் (திருநெல்வேலி),  பரமத்திவேலூர் (நாமக்கல்), காஞ்சிபுரம், திருவாரூர் பாடாலூர்  (பெரம்பலூர்)  வேங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா  1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று தமிழக  கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

08.10.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »