Press "Enter" to skip to content

லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு உ.பி. அரசு அனுமதி மறுப்பு

லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே, லக்கிம்பூர் கேரியில் வன்முறை மோதல்களின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 6-ம் தேதி சீதாப்பூர் மற்றும் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி தலைமையிலான குழுவை அனுமதிக்க வேண்டும் என உ.பி. முதல் மந்திரி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், லக்கிம்பூர் கேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி இல்லை என உ.பி. மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »