Press "Enter" to skip to content

ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் – இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதி

தென்மாவட்ட தொடர் வண்டிகள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டதை இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, இந்த தொடர் வண்டிகள் ஒரு சில தொடர் வண்டி நிலையங்களில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1-ந் தேதி முதல் தென்மாவட்ட தொடர் வண்டி போக்குவரத்து நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி (வ.எண்.06723/06724), தாம்பரம்-நாகர்கோவில் (வ.எண்.06191/06192), மதுரை-புனலூர் (வ.எண்.06729/06730), கன்னியாகுமரி-ராமேசுவரம் (வ.எண்.06166), திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (வ.எண்.02627/02628), கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ், (வ.எண்.02668), கோவை-நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ், (வ.எண்.06321/06322), மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் (வ.எண்.06343/06344), பெங்களூரு-நாகர்கோவில் (வ.எண்.0723207236),

கன்னியாகுமரி-சென்னை (வ.எண்.02633/02634), குருவாயூர்-சென்னை (வ.எண்.06127/06128), சென்னை-கொல்லம் (வ.எண்.06101/06102), நாகர்கோவில்-மும்பை (வ.எண்.06339/06340), கன்னியாகுமரி-நிஜாமுதீன் (வ.எண்.06011/06012), கன்னியாகுமரி-ஹவுரா (வ.எண்.02665/02666) உள்ளிட்ட தொடர் வண்டிகள் குறிப்பிட்ட தொடர் வண்டி நிலையங்களில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றத்தை உறுதி செய்ய, மத்திய அரசின்https://enquiry.indianrail.gov.in/mntesஎன்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

அத்துடன், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் 139 என்ற தொலைபேசி எண் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »