Press "Enter" to skip to content

சிவகங்கையில் மாவோயிஸ்டு சகோதரர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சிவகங்கைக்கு வந்த அதிகாரிகள் காவல் துறையினர் உதவியுடன் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டதால் அவர்களது இயக்கத்தில் காளிதாஸ் சேர்ந்தார்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்தனர். தற்போது அவர் கேரளாவில் சிறையில் உள்ளார்.

அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.

சிவகங்கையில் காளிதாசின் சகோதரர் சிங்காரம் வசிப்பது தெரியவந்தது. அங்கு இன்று காலை தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 2 அதிகாரிகள் சிவகங்கை வந்தனர். அவர்கள் சிவகங்கை காவல் துறையினர் உதவியுடன் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அதே போல் வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. வீட்டிற்கு வெளியே நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடை பெற்று வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »