Press "Enter" to skip to content

இலவச தடுப்பூசிக்காகதான் கல்லெண்ணெய் விலை உயர்த்தப்படுகிறது- மத்திய மந்திரி விளக்கம்

அசாம் மாநிலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டர் கல்லெண்ணெய் அடிப்படை விலை ரூ.40 ஆக உள்ளது. இதில் அசாம் அரசு ரூ.28 வாட் வரி விதிக்கிறது. மத்திய பெட்ரோலியத் துறை ரூ.30 வரிவிதிக்கிறது.

புதுடெல்லி:

மத்திய பெட்ரோலிய இணை மந்திரி ராமேஸ்வர் டெலி அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். தின்சுகியாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கல்லெண்ணெய் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் குறைகூறுகிறார்கள். கல்லெண்ணெய் விலை அப்படியே தான் இருக்கிறது. வரிவிகிதங்களால் அதன் விலை அதிகரித்திருக்கிறது.

அசாம் மாநிலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டர் கல்லெண்ணெய் அடிப்படை விலை ரூ.40 ஆக உள்ளது. இதில் அசாம் அரசு ரூ.28 வாட் வரி விதிக்கிறது. மத்திய பெட்ரோலியத் துறை ரூ.30 வரிவிதிக்கிறது. அந்த அடிப்படையில் இங்கு கல்லெண்ணெய் விலை ரூ.98 ஆக உள்ளது.

ஆனால் கல்லெண்ணெய் விலையை விட சில குடிநீர் பாட்டில்கள் விலை அதிகமாக இருக்கிறது. ‘ஹிமாலயன் வாட்டர்’ என்ற மினரல் வாட்டர் பாட்டில் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அப்படிப்பார்த்தால் கல்லெண்ணெய் விலை அதிகம் என்று சொல்ல முடியாது.

கல்லெண்ணெய் விலை வரி விகிதங்களால் அதிகமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறீர்கள். இதற்கு எங்கிருந்து பணம் வரும். நீங்கள் இதற்கு பணம் தரா விட்டால் எங்கிருந்து அந்த பணத்தை வசூலிப்பது. அந்த வகையில் கல்லெண்ணெய் வரி விதிக்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அசாம் மாநிலத்தில் கல்லெண்ணெய் விலை குறைவாகவே இருக்கிறது. இதற்கு மாநில அரசு வாட் வரியை குறைவாக வைத்திருப்பதுதான் காரணம்.

ஆனால் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வாட் வரி அதிகமாக விதித்திருப்பதால் அந்த மாநிலங்களில் கல்லெண்ணெய் விலை அதிகமாக இருக்கிறது. மாநில அரசுகள் நினைத்தால் கல்லெண்ணெய் மீதான மாநில வாட்வரியை வெகுவாக குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இதுவரை கட்சி மாறாதவர்களுக்கு மரியாதை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »