Press "Enter" to skip to content

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 9.5 சதவீதம் வளர்ச்சி அடையும் – ஐஎம்எப் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 8.5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்:

ஐஎம்எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 9.5 சதவீத வளர்ச்சி அடையும் எனவும், அடுத்த ஆண்டு 8.5 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது.

இதேபோல்,  உலக பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 5.9 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார வல்லரசு நாடான சீனா நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 5.6 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி காணும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »