Press "Enter" to skip to content

இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை

கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு பயாலஜிக்கல்-இ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

புதுடெல்லி:

ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த கோர்பேக்சஸ் தடுப்பூசியை 3-வது பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம். இதன் 3-வது கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இதை தனது விண்ணப்பத்தில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் சுட்டிக்காட்டி, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் எனவும், அதன்பின்னர் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »