Press "Enter" to skip to content

மெட்ரோ தொடர் வண்டி சேவை இன்று நள்ளிரவு 12 மணிவரை நீட்டிப்பு

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறும் சேர்ந்து வருவதால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் வசதிக்காக மெட்ரோ தொடர் வண்டி சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் மெட்ரோ தொடர் வண்டிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகிறது.

அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை 2 வழித்தடங்களிலும் மெட்ரோ தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. தளர்வுகள் காரணமாக மெட்ரோ தொடர் வண்டிகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறும் சேர்ந்து வருவதால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் வசதிக்காக மெட்ரோ தொடர் வண்டி சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு நாள் மட்டும் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ தொடர் வண்டி சேவை நீட்டிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ தொடர் வண்டி இயக்கப்படுகிறது.

பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இது இன்று இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 15 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ தொடர் வண்டி வீதம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »