Press "Enter" to skip to content

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை -அதிமுக குற்றச்சாட்டு

திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது என அதிமுக கூறி உள்ளது.

சென்னை:

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியினர் உற்சாகத்துடன் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடந்ததாகவும், மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தனது கைப்பாவையாக மாற்றி விட்டது என்றும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது

திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது. முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. திமுகவிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளது. அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »