Press "Enter" to skip to content

பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வெங்கடேஷ் அய்யர், ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா (18), தவான் (36) ஆகியோர் ஓரளவிற்கு ஓட்டங்கள் அடித்தனர். ஆனால் தவான் 39 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 23 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பண்ட் 6 ரன்னிலும், ஹெட்மையர் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 30 ஓட்டங்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 2 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

பின்னர் 136 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 12.2 சுற்றில் 96 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.

அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 சுற்றில் 123 ரன்னாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 சுற்றில் 13 ரன்களே தேவைப்பட்டது.

ஷுப்மான் கில் 46 பந்தில 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு சுற்றில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த சுற்றில் 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினார் நோர்ஜே. இதனால் கடைசில் சுற்றில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ஓட்டத்தை அடித்தார. 2-வது பந்தில் ஓட்டத்தை எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »