Press "Enter" to skip to content

பல்வேறு விசயங்கள் குறித்து ஏர் இந்தியா யூனியன்கள் மத்திய அமைச்சக செயலாளருக்கு கடிதம்

ஏர் இந்தியா டாடா நிறுவனத்திற்கு கைமாறியதால், வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா  நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கான ஒப்பந்தம் வெளியிட்டது. டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா வாங்க விண்ணப்பம் செய்து இருந்தது. டெண்டரில் டாடா குழுமம் வெற்றி பெற்றிருந்ததால், ஏர் இந்தியா டாட்டா குழுமம் கைவசம் செல்கிறது.

இதனால் ஏர் இந்தியாவில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் நிலைமை என்ன என்பது? கேள்விகுறியாக உள்ளது. மேலும், அவர்களுக்கு கிடைத்த சலுகைகள் தொடர்ந்து கிடைக்குமா என்பதும் சந்தேகமே?.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் யூனியன்கள் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சக செயலாளருக்கு இணைந்து ஒரு கடிதத்தை எழுதி உள்ளது.

அதில் பணம், விடுமுறை, மருத்துவ வசதி, தங்குமிடம் மற்றும் நிலுவைத் தொகைகள் (அரியர்ஸ்) குறித்து தங்களது கவலை தெரிவித்துள்ளதன.

மேலும், டாடா நிறுவனம் ஊழியர்களை  பணம் கை மாறும் வரை அல்லது ஒரு வருடம்  ஏர்லைன்ஸ் பிளாட்டுகளில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். ஒரு வருடத்திற்காவது டாடா நிறுவனம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »