Press "Enter" to skip to content

அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் சாதனங்கள் அப்டேட் செய்யப்பட்டன.

ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆப்பிள் மியூசிக் சேவையில் துவங்கி, ஏர்பாட்ஸ் 3, மேக்புக் ப்ரோ என புதிய இயர்பட்ஸ், பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

இத்துடன் ஆப்பிள் வாய்ஸ் பெயரில் புதிய சந்தா முறை அறிவிக்கப்பட்டது. இதில் சிரியை கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை இயக்க முடியும். 

இத்துடன் ஹோம்பாட் சின்ன (மினி) சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகின. அந்த வகையில் ஹோம்பாட் சின்ன (மினி) கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை சிறப்பாக இயக்க முடியும். ஹோம்பாட் சின்ன (மினி) புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் விலை ரூ. 9,900 ஆகும்.

ஏர்பாட்ஸ் 3

ஆப்பிள் நிகழ்வில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள புதிய சென்சார்கள் இசையின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 விலை ரூ. 18,500 ஆகும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஒலிநாடா அம்சம் சேர்க்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.

எம்1 சீரிஸ் பிராசஸர்

எம்1 சீரிஸ் பிராசஸர்கள்

ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ பெயரில் புதிய பிராசஸர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இதன் 16 கோர் நியூரல் என்ஜின் ஒரே நொடியில் பல கோடி செயல்களை புரியும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 கோர் ஜிபியு கொண்டுள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மேக்புக் ப்ரோ

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள்

ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மேஜிக் கீபோர்டு, ஹெட்போன் ஜாக், மேக்சேப் வசதி, ரெட்டினா டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மேக்புக் ப்ரோ எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ சிப்செட்களுடன் கிடைக்கின்றன. இவை மேக்புக் ப்ரோ மாடல்களில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான செயல்திறன் வழங்குகின்றன. மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 1080 பிக்சல் பேஸ்டைம் ஹெச்.டி. ஒளிக்கருவி (கேமரா) வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த காணொளி, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர். போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய மேக்புக் ப்ரோ மாடலில் லிக்விட் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். டிஸ்ப்ளே, சின்ன (மினி) எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேக் ஓ.எஸ். மான்டெரி மூலம் இயங்கும் புதிய மேக்புக் ப்ரோ அதிகபட்சம் 8 டிபி வரையிலான ஸ்டோரேஜ், அதிகபட்சம் 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மேக்புக் ப்ரோவில் உள்ள மின்கலவடுக்கு (பேட்டரி) அதிகபட்சம் 21 மணி நேர காணொளி பிளேபேக் வழங்குகிறது.

ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கும் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,94,900 என்றும் ரூ. 2,39,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 2,39,900, ரூ. 2,59,900 மற்றும் ரூ. 3,29,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »