Press "Enter" to skip to content

குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்- தமிழக அரசு தகவல்

மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகளின் அனைத்து விதமான நலன் மற்றும் பாதுகாப்பிற்காக தமிழக அரசு எப்போதுமே சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது.

மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி உள்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »