Press "Enter" to skip to content

அதிரும் அமெரிக்கா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.93 கோடியைத் தாண்டியுள்ளது.

வாஷிங்டன்:

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.93 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா வைரசால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.90 கோடியை தாண்டியது. 94.74 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »