Press "Enter" to skip to content

இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை

வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்புப் படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

வாகா:

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி அட்டாரி – வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »