Press "Enter" to skip to content

பாதுகாப்பு குளறுபடி விவகாரம் – பிரதமரிடம், பஞ்சாப் முதலமைச்சர் வருத்தம்

பிரதமர் மோடி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடில்லி :

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது சாலையை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது வாகனம் விழா நடைபெறும் இடத்தை அடைய முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து அவரது பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக, அவருடன் காணொலி காட்சி உரையாடலின் போது பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி வருத்தம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.  

அப்போது பிரதமருடன் உரையாடிய பஞ்சாப் முதலமைச்சர் சன்னி,  பஞ்சாப் பயணத்தின் போது நடந்ததற்கு வருந்துவதாக கூறினார்.  நீங்கள் எனக்கும், எங்கள் அனைவருக்கும் மரியாதைக்குரியவர்கள்.  உங்களது பஞ்சாப் பயணத்தின் போது என்ன நடந்ததோ அதற்கு நான் வருந்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்ட பஞ்சாப் முதலமைச்சர் சன்னி, பிரதமர் வாழ்நாள் முழுவதும் உற்சாகத்துடன் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என ஹிந்தி கவிதை வரிகளை கூறி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »