Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – ஐ.நா.சபை எச்சரிக்கை

இந்தியாவில்,டெல்டா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் உருவான 2வது அலையில் 2,40,000 பேர் உயிரிழந்ததாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

நியூயார்க் :

சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில்,டெல்டா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் உருவான 2வது அலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 2,40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் இந்திய பொருளாதாரத்தை 2வது அலை சீர்குலைத்தது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கின. இதேபோன்ற பாதிப்பு விரைவில் நடக்கக் கூடும்.  

மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான், மனித சமுதாயத்திற்கும்,  பொருளாதாரத்திற்கும் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையில், இறப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு சுமையாக இருந்தது.  உலகளவில் டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு அதிகரிக்கும் என்பதை நாடு இப்போது காண்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  கொரோனாவை கட்டுப்படுத்த  தடுப்பூசி உள்பட ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த உலகளாவிய அணுகுமுறை வேண்டும். உலகப் பொருளாதாரத்தை உள்ளடக்கிய மற்றும் நிலையான மீட்சிக்கு கொரோனா பரவல் தொடர்ந்து மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை லியு ஜென்மின் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »