Press "Enter" to skip to content

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி பார்வை

சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதியை பார்வை செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.இன்று பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதிதரிசனமும் நடக்கிறது.

இந்த பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர்.

பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். 

தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொள்வர். பின் அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். தொடர்ந்து  தீபாராதனை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி பார்வை காட்சி தரும். மூன்று முறை  தொடர்ந்து மகரஜோதி காட்சியை பக்தர்கள் பார்கலாம்.  

மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை பார்வை செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »