Press "Enter" to skip to content

அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை – வெள்ளை மாளிகை அறிவிப்பு

ஒரு வீட்டில் அதிகபட்சமாக 4 பரிசோதனைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வாஷிங்டன்: 

அமெரிக்கா நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தம் 65,904,256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 871,215 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், அமெரிக்க மக்கள் நலனுக்காக 500 மில்லியன் இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அரசால் வலைதளம் தொடங்கப்படும் என்று  அதிபர் ஜோ பைடன் கடந்த டிசம்பரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வரும் 19ந்தேதி முதல் COVIDTests.gov என்ற வலைதளம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதில் பெயர் மற்றும் முகவரி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிட்டால் போதும்.  இதுபற்றிய ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஒரு குடியிருப்பு முகவரிக்கு 4 பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனைக்கான வாங்கிய 7 முதல் 12 நாட்களுக்குள் தபால் சேவை மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பப்படும் என்று வெள்ளை மாளிகை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »