Press "Enter" to skip to content

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்: ஆர்.எஸ்.எஸ்

பிரதமர் மோடியின் அரசு 36 வகை நலத்திட்டங்களை சிறுபான்மையினர் நலனுக்காக அமல்படுத்தியுள்ளது என ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.

புது டெல்லி:

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவில் இருந்து 3 அமைச்சர்கள் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் வெளியேறினர். தலித், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர் நலன் ஆகியவற்றில் பா.ஜ.க கவனம் செலுத்தவில்லை என்பதே இதற்கு காரணம் என கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர்.  இதை புரிந்துக்கொண்டு எதிர்வரும் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில், இஸ்லாமியர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

பா.ஜ.க தான் இஸ்லாமியர்களுக்கு ”மிகப்பெரிய நலம் விரும்பி” என்பதை மத்திய அரசும், மாநிலங்களை ஆளும் பா.ஜ.க அரசுகளும் இஸ்லாமியர்களுக்காக அறிவித்துள்ள திட்டங்களை பார்த்தாலே தெரியும்.

பிரதமர் மோடியின் அரசு 36 வகை நலத்திட்டங்களை சிறுபான்மையினர் நலனுக்காக அமல்படுத்தியுள்ளது.

உண்மையில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »