Press "Enter" to skip to content

தேசிய ராணுவ தினம்: முப்படைகளின் வீரத்தை வெளிப்படுத்தும் காணொளி வெளியீடு

இந்திய ராணுவம் சார்பில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். 

இதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவ தினம்  ஜனவரி 15-ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தேசிய ராணுவ தினத்தையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் ராணுவ வீரர்களின் சாகசங்களை பதிவு செய்யும் வகையில் இந்திய ராணுவம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் முப்படைகளின் பெருமை, சாகசம், வீரம் உள்ளிட்ட பல அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. அந்த காணொளியை கீழே காணலாம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »