Press "Enter" to skip to content

பான் அட்டைடன் ஆதாரை இணைக்க தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

பான் அட்டைடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் அட்டை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பான் அட்டைடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பலமுறை கால கெடுவை நீட்டித்து இருந்தது. தற்போது பான் அட்டை- ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கெடு தேதிக்குள் பான் அட்டைடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதார்- பான் அட்டை இணைக்கப்படாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் என்னுடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால் பான் எண் செயல்படாதது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. சமீபத்திய அறிவிப்பில் அத்தகைய பான் அட்டை வைத்திருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரி துறை தெளிவாக தெரிவித்துள்ளது.

ஆதாருடன் இணைக்கத் தவறினால் செயல்படா நிரந்தர கணக்கை எண்ணை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறை ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பான் அட்டை செயலிழந்தால், சட்டத்தின்படி பான் வழங்கப்படவில்லை என்றும், வருமானவரி சட்டத்தின் 272 பி பிரிவின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »