Press "Enter" to skip to content

பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு – 12 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த யோகேஷுக்கு ஸ்கூட்டர் பரிசு

திருச்சி பெரியசூரியூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 2 பேர் பலியாகினர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக மொத்தம் 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது. காலை 8 மணிக்கு போட்டிகள் தொடங்கின. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத் துறையினரின் ஆய்விற்கு பிறகு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி தென்னலூரைச் சேர்ந்த யோகேஷ் முதல் பரிசை தட்டிச் சென்றார்

முதல் இடம் பிடித்த யோகேஷுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், 9 காளைகளை அடக்கி மனோஜ் என்பவர் 2-வது இடம் பிடித்தார். 

சிறந்த காளையாக கைகுறிச்சியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »